Menu Close

தேவன் எசேக்கியேலின் தலைமுடியையும் தாடியையும் செய்யச் சொன்னதன் விளக்கம்

தேவன் எசேக்கியேலிடம் தலைமுடியையும், தாடியையும் சிரைக்கச் சொன்னார். பின் அந்த முடியை மூன்று பங்காக்கி, ஒரு பங்கை முற்றுகை நாட்கள் முடிகிறபோது அக்கினியால் சுட்டெரிக்கவும், ஒரு பங்கை கத்தியாலே வெட்டவும், ஒரு பங்கை காற்றில் தூவவும் கூறினார். அதில் கொஞ்சம் மாத்திரம் எடுத்து அவனுடைய வஸ்திரத்தில் முடிந்து வைக்கச் சொன்னார் – எசே 5:1 – 3
இதன் அர்த்தம் என்னவெனில் மூன்று பங்காகப் பங்கிடப்பட்ட எசேக்கியேலின் தலைமுடியும், தாடியும் எருசலேம் நகரவாசிகளின் முடிவுக்கு அடையாளம். அக்கினியால் எரிக்கப்பட்ட மூன்றில் ஒரு பாகம் பஞ்சத்தினாலும், கொள்ளை நோயாலும் இறப்பவர்களுக்கு அடையாளம். மற்றொரு பாகம் பட்டயத்தால் இறப்பவர்களுக்கு அடையாளம். மூன்றாம் பாகம் சிறைபிடிக்கப்பட்டு சிதறிப்போன மீதியானவர்களைக் குறிக்கும். உடையில் முடிந்து வைக்கப்பட்ட கொஞ்சம் முடி தேவன் பாதுகாத்து வைக்கும் மீதியான சிலரைக் குறிக்கிறது.

Related Posts