இயேசு மிக உயர்ந்த மலைக்கு பேதுரு, யாக்கோபு, யோவானை அழைத்துச் சென்ற போது இவர்களுக்குத் தேவனோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு முன்னால் இயேசு மறுரூபமானார். அவரது முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது. அவரது உடை வெளிச்சத்தைப் போல் வெண்மையாக இருந்தது. மோசேயும் எலியாவும் அவர்களுக்குத் தரிசனமானார்கள். ஒளிமிக்க ஒருமேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் “என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அதைக்கேட்டு சீஷர்கள் முகங்குப்புற விழுந்தார்கள் – மத் 17:1 –5