ஏசாயா தீர்க்கதரிசி ஒரு மகிமையான தரிசனத்தைப் பார்த்தார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைப் பார்த்தார். அவரடைய வஸ்திரத்தின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருப்பதையும் கண்டார். ஆறு செட்டைகளுள்ள சேராபீன்கள் இரண்டு செட்டைகளால் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி கர்த்தருக்கு மேலாக நின்று, கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார். உடனே ஏசாயா “நான் அசுத்த உதடுள்ள மனுஷன், சேனைகளின் ராஜாவாகிய கர்த்தரை என் கண்கள் கண்டதே” என்றான். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலைக் குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டான். அதனால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு “யாரை நான் அனுப்புவேன்,யார் நமது காரியமாகப் போவான்” என்று கர்த்தர் கேட்டதற்கு ஏசாயா “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றான்.” – ஏசா 6:1-8.