• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள் பார்வோனிடம் :இது தேவனுடைய விரல்” என்றனர் – யாத் 8:18, 19
• யாத் 31:18 “சீனாய்மலையில் கர்த்தர் மோசேயோடே பேசி முடித்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.”
• சங் 8:3 “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது,”
• தானி 5:5 “அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்த கையுறுப்பை ராஜா கண்டான்..”
• யோ 8:6 “இயேசுவின்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினர்.”