1. ஒரு தீர்க்கதரிசி பலிபீடத்தைப் பார்த்துப் பேசினார். அந்த பலிபீடத்தில் யோசியா என்பவன் பிறந்து தூபங்காட்டுவான் என்றும் ஆசாரியர்கள் அதன்மேல் பலியிடுவார்கள் என்றும் பலிபீடம் வெடிப்பது தான் அதற்கு அடையாளம் என்றும் கூறினார் – 1இரா 13:2, 3
2. ஒரு தீர்கதரிசி மலையைப் பார்த்து மலை செய்த பாவத்தினால் அதன் ஆஸ்திகளையும், பொக்கிஷங்களையும், உன் மேடைகளையும் சூரையாடுவேன் என்றான் – எரே 17:3
3. இயேசு கப்பர்நாகூமைப் பார்த்து “நீ பாதாள பரியந்தம் தள்ளப்படுவாய்” என்றார் – மத் 11:23
4. எசேக்கியேல் தீர்க்கதரிசி “கர்த்தர் எலும்புகளிடம் உங்களுக்குள் ஆவியை பிரவேசிக்கப் பண்ணுவேன், நீங்கள் உயிரடைவீர்கள்.” என்று கூறுவதாகக் கூறினார் – எசே 37 :5, 6, 7
5. எசேக்கியேல் “கர்த்தர் சகலவித பட்சிகளையும், மிருகங்களையும் நோக்கி, நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்துக்கு வந்து மாம்சத்தைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்” என்றார் – எசே 39:17 – 20