Menu Close

தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்

1. யோசேப்பு: யோசேப்பு தன் சகோதரர்களால் குழிவாழ்க்கையும், சிறைவாழ்க்கையும் அனுபவித்தான். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களைக் கண்டவுடன் முத்தஞ் செய்து, அழுது அவர்களைப் பராமரித்தான் – ஆதி 45:15
2. மோசே: மோசே விவாகம் பண்ணின எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மிரியாமும், ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசினார். அதனால் கர்த்தர் கடுங்கோபங் கொண்டு மிரியாமை குஷ்டரோகியாக்கினார். ஆனால் மோசே அவர்களை மன்னித்து அவளுக்காக கர்த்தரிடம் கெஞ்சி சுகம் கிடைக்கச் செய்தான் – எண் 12:13
3. தாவீது: சவுல் ராஜா தாவீதைக் கொலை செய்ய எத்தனையோ தடவைகள் முயற்சி செய்தான். அவனுக்குப் பயந்து தாவீது ஓடிக்கொண்டேயிருந்தான். ஆனால் சவுலைக் கொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் தாவீது அவனைக் கொல்லவில்லை. – 1சாமு 24:1 – 7
4. இஸ்ரவேலின் ராஜா: எலிசா சீரிய ராஜாவின் படைகளை சமாரியாவிலிலுள்ள இஸ்ரவேல் ராஜாவிடம் ஒப்படைத்தான். அப்பொழுது ராஜா எலிசாவிடம் அவர்களை வெட்டிப் போடலாமா” என்று கேட்டதற்கு எலிசா அவர்களுக்கு விருந்து கொடுத்து அனுப்பச் சொன்னான் – 2இரா 6:22, 23
5. இயேசு: இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனை பேதுரு வலது காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நிறுத்தச் சொல்லி அந்தக் காதைத் தொட்டு சொஸ்தமாக்கினார் – லூக் 22 :50,: 51
6. ஸ்தேவான்: ஸ்தேவானை மக்கள் கல்லெறிந்து துன்பப்படுத்தினர். ஆனால் அவனோ ஆண்டவரிடம் “இவர்கள் மேல் இந்தப் பழியைச் சுமத்தாதிரும்” என்று வேண்டி தன் ஆவியை விட்டான் – அப் 7: 54 – 60

Related Posts