தீனாள் தேசத்துப் பெண்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். அவளை பிரபுவான சீகேம் கண்டு அழைத்துக் கொண்டு போய் கெடுத்துப் போட்டான். அவளை விவாகம்பண்ண யாக்கோபிடம் கேட்டான். யாக்கோபின் குமாரர் அந்த தேசத்து மக்களின் ஆண்கள் அனைவரையும் விருத்தசேதனம் பண்ணச் சொன்னார்கள். ஆண்கள் விருத்தசேதனம் பண்ணி நோவு எடுக்கும் நாளில் சிமியோனும், லேவியும் பட்டணத்தில் பிரவேசித்து ஆண்களைக் கொலை செய்து தீனாளை திருப்பிக் கொண்டு வந்தார்கள் – ஆதி 34:1-31