Menu Close

தாவீது மீகாள், அபிகாயில், பத்சேபாளை விவாகம் பண்ணிய விதம்

தாவீது மீகாளை மணந்தது: சவுலின் இளைய மகளான மீகாள் தாவீதை நேசித்தாள். சவுல் தாவீதைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி மீகாளை மணப்பதற்கு நூறு பெலிஸ்தியரின் நுனித்தோல்களை கொண்டு வந்தால் மீகாளைக் கொடுப்பேன் என்றதால் தாவீது அப்படியே கொண்டு வந்து சவுலிடம் கொடுத்து மீகாளை மணந்தான் – 1சாமு 18:20 –30
அபிகாயிலை மணந்தது: தாவீது நாபாலிடம் உதவி கேட்டு ஆட்களை அனுப்பினான். அவர்களை அவன் அவமதித்தான். அதனால் தாவீது கோபங் கொண்டு நாபாலைப் பழிவாங்க புறப்பட்டான். ஆனால் அவனுடைய மனைவியான அபிகாயில் தாவீதுக்கு எதிர் கொண்டு வந்து அவனைப் பணிந்து அவனுக்குத் தேவையான உதவி செய்து புருஷனின் உயிரைக் காத்தாள். ஆனால் நாபால் சிலநாட்களுக்குள் இறந்து விட்டான். அவன் இறந்த பின் தாவீது அபிகாயிலை மணந்தான் 1சாமு 25:2 – 43
பத்சேபாளை மணந்தது: தாவீது உப்பரிகையின் மேல் உலாவிக் கொண்டிருந்தபோது ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீயைப் பார்த்தான். அவள் உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் என்றறிந்து, அவளை அழைப்பித்து அவளோடு பாவம் செய்தான். உரியாவை யுத்தத்தில் மடிய வைத்து, அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் – 2சாமு 11:1 – 27

Related Posts