Menu Close

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால் கர்த்தர் மோசேயின் மூலம் வாதித்தார். அதில் ஒன்று மோசேயும் ஆரோனும் கோலை ஓங்கி எகிப்திலுள்ள நதியின் தண்ணீரை அடித்தனர். தண்ணீரெல்லாம் இரத்தமாயிற்று – யாத் 7:20, 21

2. எலியா தண்ணீரை அடித்தான் வெட்டாந்தரையாயிற்று: எலியா எடுத்துக் கொள்ளப்படும் முன் எலிசா அவனோடு சென்றான். அப்பொழுது எலியாவும், எலிசாவும் யோர்தான் கரையில் நின்றனர். அப்பொழுது எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரை அடித்தான். தண்ணீர் இருபக்கமும் பிரிந்தது. அவர்கள் இருவரும் உலர்ந்த தரை வழியாய் அக்கரைக்குப் போனார்கள் – 2இரா 2:8

3. எலிசா தண்ணீரை அடித்த போது தண்ணீர் பிளந்தது: எலியா சுழல்காற்றில் பலோகத்திற்கு ஏறிப்போவதைப் பார்த்த எலிசா “இஸ்ரவேலுக்கு இரத்தமும் குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று சொல்லித் தண்ணீரை அடித்தான். அதனால் தண்ணீர் இரு பக்கமாப் பிரிந்தது எலிசா இக்கரைப்பட்டான் – 2இரா 2:14

Related Posts