சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை நாசம் பண்ண வைத்தான் – நியா 15:3 – 5 இதனால் பெலிஸ்தியர்கள் கோபத்தில் இரண்டு புதுக்கயிறுகளால் சிம்சோனைக் கட்டினார்கள். அப்பொழுது ஆவியானவர் அவன் மேல் இறங்கி கட்டுகள் அறுந்து விழச் செய்தார். ஒரு கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றான். காசாவில் பட்டண வாசல் கதவுகளைப் பெயர்த்து தோள்மேல் வைத்து மலையுச்சிக்குப் போனான். -நியா 15:3 – 19, 16:1 – 3