இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும் பிள்ளையை இரண்டாய்ப் பிளந்து இருவருக்கும் பாதிபாதியாய்க் கொடுக்கும்படி சாலமோன் ராஜா கட்டளையிட்டார். ஒருத்தி அதற்கு சம்மதித்தாள். மற்றவள் பிள்ளையைக் கொல்லவேண்டாம் மற்றவளுக்கே கொடுத்து விடுங்கள் என்று அழுதாள். சாலமோன் அழுத அவளே பெற்றவள், அவளிடமே பிள்ளையைக் கொடுத்து விடுங்கள் என்று கட்டளையிட்டார். சாலமோனின் ஞானத்தைக் குறித்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர் – 1இரா 3:16 –28