1. சவுல் கழுதையைத் தேடிப்போனான் –- 1சாமு 9:3, 4 தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் – 1சாமு 17:15
2. சவுல் கழுதையைக் காணாததால் தேவமனிதனான சாமுவேலைத் தேடிப்போனான் –- 1சாமு 9:9 -20 தாவீதை ராஜாவாக்க சாமுவேல் தாவீதைத் தேடிச்சென்றான் –- 1சாமு 16:1 – 12
3. சாமுவேல் பலியிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சாமுவேல் சென்றான் –- 1சாமு 13:9, 10 தாவீதுக்காக சாமுவேல் ஒரு காளையைப் பலியிடச் சென்றான் –- 1சாமு 16:2 – 5
4. சவுலை சாமுவேல் ராஜாவாக இரகசியமாக அபிஷேகம் பண்ணினான் –- 1சாமு 10:1 தாவீதை சாமுவேல் சகோதரர் நடுவில் அபிஷேகம் பண்ணினான் – 1சாமு 16:13
5. சவுல் தைலக் குப்பியினால் அபிஷேகம் பண்ணப்பட்டான் – 1சாமு 10:1, 2 தாவீது தைலக் கொம்பினால் அபிஷேகம் பண்ணப்பட்டான் –- 1சாமு 16:1, 13 1இரா 1:39
6. சவுல் அபிஷேகம் பெற்றபின் தளவாடங்களில் ஒளிந்து கொண்டிருந்தான் –- 1சாமு 10:22 தாவீது அபிஷேகம் பெற்றபின் அரண்மனையில் தங்கினான் –- 1சாமு 16:21, 22
7. சவுலின் மேலிருந்த ஆவியானவர் அவனை விட்டு விலகினார் –- 1சாமு 16:14 தாவீதின் மேல் ஆவியானவர் இறங்கினார் – 1சாமு 16:13, 2 சாமு 23:2
8. சவுல் தான் செய்யக்கூடாத தகனபலியை சாமுவேல் வருவதற்கு முன் புத்தியீனமாகச் செய்தான் –- 1சாமு 13:9 – 13 தாவீது ஊழியக்காரனான அகிமெலேக் ஆசாரியன் மூலம் கர்த்தருடைய சித்தத்தை விசாரித்தான் –- 1சாமு 22:9, 10, 11
9. சவுல் அமலேக்கியரை உயிரோடே வைத்தான் –- 1சாமு 15:8, 9 தாவீது அமலேக்கியரை முற்றிலும் அழித்தான் – 1சாமு 30 :17 – 28 2சாமு 1:1
10. சவுல் தேவமனுஷனாகிய சாமுவேலின் சால்வையைப் பிடித்துக் கிழித்துப் போட்டான் – 1சாமு 15:26 – 28 தாவீது தேவமனிதனாகிய அகிமெலேக்கிடம் சென்றான் – 1சாமு 21:1
11. சவுல் பெலிஸ்தியரைக் கண்டு பயந்தான் – 1சாமு 17:11 தாவீது பெலிஸ்தியரை மேற்கொண்டான் – 1 சாமு 17:50, 51
12. சவுல் அஞ்சனக்காரியிடம் சென்று அஞ்சனம் பார்த்தான் – 1சாமு 28: 7 – 24 தாவீது கர்த்தரையே தேடினான் – 1சாமு 30:8
13. சவுலின் ஆயுதங்களை பெலிஸ்தியர் அஸ்தரோத் தேவனுடைய கோவிலில் வைத்தனர் – 1சாமு 31:9, 10 தாவீது பெலிஸ்தியனாகிய கோலியாத்தின் ஆயுதங்களை தேவனுடைய ஆலயத்தில் வைத்தான் – 1சாமு 21:9
14. சவுல் தாவீதை மிகவும் பகைத்தான் – 1சாமு 18:8 – 11 தாவீது சவுலை மிகவும் நேசித்தான் – 1சாமு 24:6, 8
15. சவுல் தாவீதைக் கொலை செய்ய முயன்றான் –- 1சாமு 19:3 – 17 தாவீதுக்கு சவுலைக் கொலை செய்யத் தருணங்கள் கிடைத்தும் ஜீவனோடு இரட்சித்தான் –- 1சாமு 24:3 – 8, 26:7 – 11
16. சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றான் –- 1சாமு 22:17 – 19 தாவீது ஆசாரியரின் மகனை ஆதரித்தான் –- 1சாமு 22:20 – 23
17. சவுலைத் தேவன் கைவிட்டார், ஆனால் தேவன் தாவீதோடு இருந்தார் –- 1சாமு 28:15, 16:18
18. சவுல் பென்யமீன் கோத்திரத்தான் –- 1சாமு 9:21 தாவீது யூதா கோத்திரத்தான் – 1சாமு 17:12
19. சவுலை ராஜாவாக்கினது தேவனுக்கு மனஸ்தாபமாயிருந்தது –- 1சாமு 15:11 தாவீது தேவனின் இருதயத்துக்கு ஏற்றவனாயிருந்தான் – 1இரா 15:5
20. சவுலையும், யோனத்தானையும் பெலிஸ்தியர் வெட்டிக் கொன்று போட்டார்கள் –- 1சாமு 31:1 – 10 தாவீது தன் மகன் சாலமோனை ராஜாவாக்கின பின் மரித்தான் – 1இரா 2:10
21. சவுலின் எலும்புகள் யாபேசிலிருக்கிற தோப்பில் அடக்கம் பண்ணப்பட்டது –- 1சாமு 31:10 – 13 தாவீது தன் பிதாக்களோடு நித்திரையடைந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான் – 1இரா 2:10