பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய போது சாமுவேல் அங்கு வந்தான். “நீர் செய்தது என்ன” என்று சவுலிடம் கேட்டதற்கு “பெலிஸ்தியர் கில்காலில் எனக்கு விரோதமாக வந்து விடுவார்கள் என்றும், இன்னும் கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணவில்லையே என்றும் எண்ணித் துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.” சாமுவேல் சவுலிடம் “கர்த்தர் உனக்கு விதித்த கட்டளையை கைக்கொள்ளாமற் போனதால் உம்முடைய ராஜ்ஜியம் நிலைத்திருக்காது” என்றார் – 1சாமு 13:8 – 14