1. பலி பழுதற்றது – லேவி 1:3-10 கிறிஸ்துவும் பழுதற்றவர்.
2. பலி முழுமையாக தகனிக்கப்பட வேண்டும் – லேவி 1:6, 13, 15 கிறிஸ்து மரணம் வரை முழுமையாக அர்பணித்தார் – பிலி 2:8
3. பலி சுகந்த வாசனையானது – லேவி 1:9, 13, 17 கிறிஸ்து தம்மை தேவனுக்குப் பிரியமான பலியாக அர்பணித்தார்.
4. பலி தேவசமூகத்தில் கொல்லப்பட வேண்டும் – லேவி 1:5 கிறிஸ்து நமக்காக மரித்தார்.
5. பலி இரத்தம் தெளிக்கப்பட வேண்டும் – லேவி 1:5, 15 கிறிஸ்து இறுதித்துளி இரத்தம் வரை சிந்தினார்.
6. பலி தலை, கால், குடல், கொழுப்பு அனைத்தும் தகனிக்கப்பட வேண்டும் – லேவி 1:8, 9 கிறிஸ்து தம்மையும் தமது விருப்பம், செயல் அனைத்தையும் பிதாவுக்கு சுகந்த பலியாக அர்பணித்தார்.
7. பலி அவரவர் பாவத்திற்கேற்ற மிருகமாக இருந்தது – லேவி 1:3, 10, 14 கிறிஸ்து எவ்வளவு கொடிய பாவிக்காகவும் ஏழை, பணக்காரன் ஏற்ற தாழ்வின்றி அனைவருக்காகவும் பலியானார்.
8. பலி சாம்பல் பாளையத்துக்கு வெளியே சுத்தமான இடத்தில் சேகரிக்கப்பட்டது -லேவி 6:8-13 கிறிஸ்து பாளையத்துக்கு வெளியே பாடுபட்டார்.