Menu Close

சரீர மரணம்

சரீர மரணம் என்பது மனிதனின் சரீரத்திலிருந்து உள்ளான மனிதனான ஆவி ஆத்துமா பிரிவதாகும் – லூக் 12:20 இதையே நாம் மரணம் என்கிறோம். தமது கட்டளையை மீறினால் அன்றே மரணமடைவான் என்று தேவன் ஆதாமைப் பார்த்துக் கூறியது தேவனிடமிருந்து பிரிக்கப்படும் ஆத்தும மரணத்தைக் குறிப்பதாகும் – ஆதி 2:17 ஆதாம் பாவம் செய்த நாளில் அது நிறைவேறிற்று. அந்நாளிலிருந்து தேவன் ஆதாமோடு உலாவுவதற்கு வரவில்லை. ஆதாம் பாவம் செய்த பின்னரே “நீ மண்ணாயிருக்கிறாய் நீமண்ணுக்குத் திரும்புவாய்” என்று தேவன் கூறினார் – ஆதி 3:19 இதன்படி ஆதாம் 930 வது வயதில் சரீர மரணமடைந்தார் – ஆதி 5 :5 மனிதனின் சரீரம் மட்டுமே மண்ணாலானது. எனவே அது மண்ணுக்குத் திரும்பும். ஆவி ஆத்துமாவான உள்ளான மனிதன் மண்ணுக்குத் திரும்புவதில்லை.

Related Posts