1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு ஐக்கியம் பாராட்டின சிம்சோன் குருடாகி கைலாகு கொடுக்கப்பட்டார். இது அவருடைய ஊழியத்தின் முடிவு – நியா 16:26
2. பவுல் தேவபிள்ளைகளைத் துன்புறுத்த தமஸ்குவுக்குப் போனார். வழியில் தேவ தரிசனம் கிடைத்து அவனுடைய கண்கள் குருடாகிப் போனது. அப்பொழுது கைலாகு கொடுத்து தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். கண்கள் குருடானாலும் கர்த்தரின் தரிசனம் இருதயத்தைத் திறந்த நிலையில் சவுலுக்கு கைலாகு கொடுக்கப்பட்டது. இது அவருடைய ஊழியத்தின் தொடக்கம் – அப் 9:8