1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4
இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டு செவிகளில் கர்த்தருடைய வசனத்தைக் கேட்க வேண்டும்.
2. தேவன் இஸ்ரவேலரிடம் ரெவிதீமிற்கு பிரயாணம் செய்யக் கட்டளையிட்டார் – யாத் 17:1 இந்த யுத்தத்தில் அமலேக்கியரை இஸ்ரவேலர் ஜெயம் கொண்டது போல நாமும் சொந்த மாம்சத்தோடு போராடி ஜெயம் பெற தேவன் கட்டளையிடுகிறார் – எபே 6:12, 13
3. பஸ்காவை ஆசரிக்க இஸ்ரவேலருக்குத் தேவன் கட்டளையிடுகிறார் – எண் 9:3
நாமும் இயேசுவின் சரீரத்தைப் புசிக்கக்கட்டளை பெற்றிருக்கிறோம் – 1கொரி 11:23-32
4. கர்த்தர் நோவாவிடம் பேழையைச் செய்யவும் அதற்குள் உயிரினங்களையும் சேர்த்துக் கொள்ளவும் கட்டளையிட்டார் – ஆதி 6:22, 7:8, 9. நாமும் ஆத்மாக்களை சபைக்குள் கொண்டுவர பாடுபட வேண்டும்.
5. தேவன் மோசேயிடம் பலி செலுத்தக் கட்டளையிட்டார் – லேவி 7:38. நாமும் ஸ்தோத்திரப் பலிகளைச் செலுத்துவோம்.
6. கர்த்தர் சத்துருக்களைத் துரத்தக் கட்டளையிட்டார் – எரே 50:21. இயேசுவின் நாமத்தில் நாம் சாத்தானைத் துரத்தி வெற்றி பெற வேண்டும்.
7. இயேசு சீடரிடம் அன்பாயிருக்க கட்டளையிட்டார் – யோ 13:34. நாமும் அன்பாயிருந்து இயேசுவின் சீடன் என்று விளங்கப் பண்ண வேண்டும் – யோ 13:35