ஆபிரகாமின் ஆணைப்படி ஆபிரகாமின் வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண் கொள்ளும்படி புறப்பட்டான். எலியேசர் மெசொபோத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபாக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பொருத்தனை பண்ணிக்கொண்டபடி எல்லாம் செய்தாள். அவள் எலியேசரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபாக்காளின் சகோதரன் லாபானும் அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தனர். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபானும், பெத்துவேலும் “இந்த காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நாங்கள் நலம், பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.” என்று சொல்லி ரெபாக்காளை எலியேசருடன் அனுப்பி விட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள் – ஆதி 24:1-67