1. கண்ணீரோடு விதைக்க வேண்டும்: சங் 126:5 “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.”
2. காணிக்கைகளைக் கொடுத்து விதைக்க வேண்டும்: 2கொரி 9:6 “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.”
3. ஆவிக்குரிய விதைகளை விதைக்க வேண்டும்: கலா 6:7, 8 “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.”
4. சாத்தான் விதைக்கும் விதைகளை எறிய வேண்டும்: தேவன் உண்டாக்கினவைகளில் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அந்த சர்ப்பம் வேண்டாத விதைகளை ஏவாளிடம் விதைத்தது. இதேபோல் சாத்தான் விதைக்கும் விதைகளை நம் உள்ளத்தில் வளரவிடக் கூடாது.
5. கர்த்தர் விதைக்கும் விதைகளை உள்ளத்தில் பதிக்க வேண்டும்: 1யோ 4: 4 “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்”