1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார்.
2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது.
3. பெருமை பித்து கொள்ள வைக்கும் பாதுகாப்பு அரண்கள் விரைவில் சூறையாடப்படும்.
4. நாம் பழிவாங்க நினைத்தால் தோல்வி உறுதி. தேவன் தீமை செய்வோரை பழிவாங்குவதும் உறுதி.
5. பிறரது அழிவில் மகிழ்ந்தால் நமது வெற்றிகள் பாதிக்கப்படுவது நிச்சயம்.
6. நாம் அடைந்த சம்பாத்தியங்களைப் பாதுகாப்பாகக் கருதி நாம் அமர்ந்தால் சூழல்கள் மாறும்போது திகைப்புறுவது உறுதி.
7. தன்னிறைவு சிந்தை, பெருமை, சுயநீதி, தன்னல நியாயத்தீர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தேவ ஆசீர்வாதத்துக்கு களன் ஏற்படுத்தும்.