எலியா பெத்தேலுக்கும் அங்கிருந்து எரிகோவுக்கும் அங்கிருந்து யோர்தானுக்கு அப்பாலும் போனான். அவன் கூடவே எலிசாவும் சென்றான். இருவரும் யோர்தானின் கரையில் நின்றார்கள். எலியா தன் சால்வையை எடுத்து தண்ணீரை அடித்தான். தண்ணீர் பிரிந்தது. அவர்கள் இருவரும் உலர்ந்த தரை வழியாய் அக்கரைக்குப் போனார்கள். எலிசா எலியாவிடம் இரட்டிப்பான ஆவியை வேண்டிக் கொண்டான். அதற்கு எலியா “தான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும் என்றான்.” அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அக்கினி இரதங்களும், குதிரைகளும் அவர்களைப் பிரித்தது. எலியா சுழல்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான் – 2இரா 2:1 – 11