Menu Close

எத்தனான யாக்கோபை தேவன் நேசிக்கக் காரணம்

1. குணசாலியாயிருந்ததால்: ஆதி 25:27 “யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தான்.”

2. ஆசீர்வாதத்தின் மேல் ஆவலாயிருந்ததால்: ஆதி 25:31 “அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப் போடு என்றான்.”

3. குறுக்கு வழியில் பெண் தேடாமல் பரிசுத்தவானாயிருந்ததால்: ஆதி 29:18 “யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான்.”

4. தாழ்மையும், சமாதானமும் தேடுகிறவனாயிருந்ததால்: ஆதி 33:3 “யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.”

5. விக்கிரத்தை விலக்கிப் போட்டதால்: ஆதி 35:4 “யாக்கோபின் வீட்டார் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப் போட்டான்.”

Related Posts