1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3
2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே பாயும் ஓடையையும் தூர்த்துப் போட்டான் – 2நாளா 32:4
3. எசேக்கியா ராஜா இடிந்து போன தாவீதின் மதில்களையெல்லாம் கட்டி கோட்டையைப் பலப்படுத்தினான் – 2 நாளா 32:5
4. எசேக்கிய ராஜா திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் சேர்த்தான் – 2நாளா 32:5
5. எசேக்கியாராஜா ஜனங்களிடம் “அசீரியருக்குப் பயப்படாதிருங்கள். அவர்களுக்கு இருப்பது மாம்சபுயம். நம்மோடிருப்பவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று உற்சாகப் படுத்தினார் – 2நாளா 32:8