கர்த்தர் தம்முடைய முரட்டாட்டமான மக்களிடையே பேசும்படியாக ஓரு உவமையை எசேக்கியேலுக்குத் தந்தார். ஒரு கொப்பரையைத் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் நல்ல முன்னந்தொடைகளையும், பின்னந்தொடைகளையும் எலும்புகளையும் போட்டு காய்ச்சக் கூறினார்.
இதன் பொருள் என்னவெனில் எருசலேம் சமையலுக்கு உதவும் பானையைப் போல இருக்கிறது. அதின் மக்கள் பானையில் வேகும் இறைச்சித்துண்டுகளைப் போலவும், தெரிந்தெடுக்கப்பட்ட எலும்புகளைப் போலவும் இருக்கிறார்கள். இந்த இறைச்சிகளும், எலும்புகளும் பாபிலோனியர்களால் உட்கொள்ளப்படும். பானையிலுள்ளவைகளெல்லாம் காலியானபின்பு, நியாயத்தீர்ப்பின் அக்கினி அப்பானையின் களிம்பை எறியச்செய்து அதின் அழுக்கெல்லாம் உருகிப் போகும்படி செய்து, அதின் துரு எரிந்து போகும்படி செய்யும்.
இதில் நேபுகாத்நேச்சாரை நியாயத்தீர்ப்பின் தீயை மூட்டுபவராகக் காட்டுகிறார். நகரம் இறைச்சிக் கொப்பரையாக இருந்து, பாதுகாப்பதற்குப் பதில் அதுவே வெந்து உருகி தூய்மையடைந்தது. இரத்தத்தால் மாசுபட்ட நகரம் நியாயத்தீர்ப்பு வழியாக மட்டுமே தூய்மையடைய முடியும் என்பதை எசேக்கியேல் மூலம் தேவன் கூறுகிறார் – எசே 24:1 – 14