1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24
2. “விட்டுக்கொடுத்து அமைதியாய்ப் பேசுவது கோழைத்தனம்.” என்று உலகம் கூறுகிறது. “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;” என்று வேதம் கூறுகிறது – நீதி 14:29
3. “லஞ்சம் வாங்கினால் தான் பிழைக்க முடியும்.” என்று உலகம் கூறுகிறது. “பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.” என்று வேதம் கூறுகிறது – நீதி 15:27
4. “பேச்சு சாமர்த்தியம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.” என்று உலகம் கூறுகிறது. “பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்னப்படுவான்.” என்று வேதம் கூறுகிறது – நீதி 17:28
5. “கலப்படம் செய்து, கள்ளத்தராசைப் பயன்படுத்தினால் தான் வியாபாரத்தில் முன்னேறலாம்.” என்று உலகம் கூறுகிறது. “வெவ்வேறான நிறைக்கற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.” என்று வேதம் கூறுகிறது – நீதி 20 :23
6. “குனியக்குனியக் குட்டுபவருக்குத் தாழ்ந்து போகாதே.” என்று உலகம் கூறுகிறது. “மேன்மைக்கு முன்னானது தாழ்மை.” என்று வேதம் கூறுகிறது – நீதி 18:12
7. “செத்தாலும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்” என்று உலகம் கூறுகிறது. “குற்றத்தை மன்னிப்பது மகிமை.” என்று வேதம் கூறுகிறது – நீதி 19:11
8. “சும்மா விடாதே இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்.” என்று வேதம் கூறுகிறது. “தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக – ஆசீர்வதியுங்கள்.” என்று வேதம் கூறுகிறது. – 1பேது 3:9