1. ஆபிரகாமுக்கு 100 வது வயதில் பிறந்தான் – ஆதி 21:5
2. ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில் தேவகட்டளைப்படி விருத்தசேதனம் பண்ணப்பட்டான் – ஆதி 21:4
3. ஈசாக்கு பால் மறந்த நாளில் அவனுக்காக ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான் – ஆதி 21:8
4. ஆபிரகாமால் பலியிட மோரியா மலைக்குக் கொண்டுபோகப் பட்டான் – ஆதி 22:1-13
5. தியானம் பண்ணுகிறவனும், ஜெபம் பண்ணுகிறவனுமாயிருந்தான் – ஆதி 24:63, 25:21
6. தேசத்தின் பஞ்சத்தால் பெலிஸ்தியரின் ராஜாவாகிய அபிமலேக்கினிடம் போனான் – ஆதி 26:1-18
7. விதைவிதைத்து 100மடங்கு பலனைப் பெற்றான். அநேக நீறுற்றுகளைத் தோண்டி னான் – ஆதி 26:12-22
8. ஈசாக்கின் மேய்ப்பருக்கும், கேராரின் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று – ஆதி 26:20
9. பெயர்சபாவிலே வைத்து ஈசாக்கு அபிமலேக்குடன் உடன்படிக்கை பண்ணி, விருந்து வைத்தான் – ஆதி 26:23-33
10. நாற்பதாவது வயதில் ரெபாக்காளை விவாகம் பண்ணினான் – ஆதி 25:20
11. உயிருக்குப் பயந்து தன் மனைவியை சகோதரி என்று கூறினான் – ஆதி 26:7
12. ஈசாக்குக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். ஈசாக்கு ஈசாவின் மேலும், ரெபாக்காள் யாக்கோபின் மேலும் பாசமாயிருந்தனர். முதிர் வயதான ஈசாக்கை யாக்கோபு ஏமாற்றி ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான் – ஆதி 25:21-28, 27:1-29
13. ஈசாக்கு விசுவாச வீரன். தன் தகப்பனைப் போல கூடாரவாசி. ஒரு தீர்க்கதரிசி. இயேசுவுக்கு முன்னடையாளமானவன். 180வது வயதில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான் – எபி 11:9, 20