1. ஒத்னியேல்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது வருடங்கள். ஆற்றல் மிக்க கானான் நகரமொன்றைக் கைப்பற்றினார் – நியா 1:10 – 20
2. ஏகூத்: இவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் எண்பது வருடங்கள். மோவாப் அரசரான எக்லோனைக் கொன்றார் – நியா 3:15 –30
3. சம்கார்: அறுநூறு பெலிஸ்தியர்களைக் கொன்றார் – நியா 3:31, 5:6 – 8
4. தெபோராள்: எப்பீராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவள். இவளது ஆட்சி காலம் நாற்பது ஆண்டுகள். சேனாதிபதி சிசெராவை ஓட வைத்தவள் – நியா 4:3 – 5:14
5. கிதியோன்: இவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் நாற்பது ஆண்டுகள். 300 பேருடன் சென்று 135000 மீதியானியரைக் கொன்றார் – நியா 6:11 – 8:29
6. அபிமலேக்கு: இவர் மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர். தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்று மூன்று ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 8:30 – 9:57
7. தோலா: இவர் இசக்கார் கோத்திரத்தைச் சார்ந்தவர். இவரது ஆட்சி காலம் இருபத்துமூன்று ஆண்டுகள். இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 10:1,2
8. யாவீர்: கீலேயாத் தேசத்திலுள்ளவர். இவரது ஆட்சி காலம் இருபத்திரண்டு ஆண்டுகள். இவருக்கு முப்பது குமாரர்கள் இருந்தனர். இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 10:3
9. யெப்தா: கீலேயாத் தேசத்திலுள்ளவர். இவரது ஆட்சி காலம் ஆறு ஆண்டுகள். அம்மோனியரை அழித்தார் – நியா 11:1 – 12 : 7
10. இப்சான்: இவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் ஏழு வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:8 – 10
11. ஏலோன்: இவர் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:11, 12
12. அப்தோன்: இவர் எப்பீராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார் – நியா 12:13 – 15
13. சிம்சோன்: இவர் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது ஆட்சி காலம் இருபது ஆண்டுகள். ஆயிரக்கணக்கான பெலிஸ்தியரைக் கொன்றார் – நியா 13:16 – 16:31
14. ஏலி: இவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் நாற்பது வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார். குடும்பத்தில் கண்டிப்பைக் காட்டத் தவறியவர் – 1சாமு 1:12, 2:11, 4:15 – 18
15. சாமுவேல்: இருபது வருடங்களுக்கு மேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார். விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். தேவனுக்கு எபெனேசர் என்று பேரிட்டார் – 1சாமு 3:1, 2:11, 21, 7:12