Menu Close

“இரண்டு அத்திபழக்கூடை” உவமையின் கருத்து

நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவையும், பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன பின்பு கர்த்தருடைய ஆலயத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு அத்திப்பழக் கூடையைக் காண்பித்தார். முதல் கூடையிலே மிகவும் நல்ல அத்திப் பழங்களும், இரண்டாவது கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது. நல்ல அத்திபழக்கூடை எதைக் காட்டுகிறதென்றால் சிறை அனுபவத்தில் துன்பங்கள் மூலம் தேவன் அவர்களை பரிசுத்தப்படுத்துவார். சிறையிருப்பின் நாட்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் தங்கள் தேசத்துக்கு வருவார்கள். அவர்கள் விக்கிரக ஆராதனையை விட்டு தங்கள் முழு இருதயத்தோடு தேவனிடத்தில் திரும்புவார்கள். உலகத்தில் தன்னுடைய மீட்பின் நோக்கத்தை தேவன் இவர்களைக் கொண்டு நிறைவேற்றுவார்.
இரண்டாவது கெட்ட பழங்களுடைய அத்திப்பழக்கூடை சிறைப்பிடிப்புக்குப் பின் எருசலேமில் விடப்பட்ட சிநேக்கியா ராஜாவையும், மற்றும் பலரையும் குறிக்கும். அவர்கள் தொடர்ந்து அவனது தீர்க்கதரிசன செய்தியையும், எதிர்த்து வரவிருக்கும் எருசலேமின் வீழ்ச்சியினால் சம்பவிக்கும் நம்பமுடியாத பயங்கரங்களைக் கண்டு அனுபவித்து அவமானத்தைக் கொண்டு வருவார்கள் – எரே 24 ம் அதிகாரம்.

Related Posts