1. தேவன் அழைத்தவுடன் கீழ்படிந்து, தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போனான் – எபி 11:8
2. விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போல சஞ்சரித்துக் கூடாரங்களில் குடியிருந்தான் – எபி 11: 9
3. தான் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான் – ரோ 4:18
4. அவன் நுறு வயதுள்ளவனாயிருக்கும் போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான் – ரோ 4:19
5. தேவன் வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்ற வல்லவரென்று நம்பி விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது – ரோ 4:20-22. கலா 3:6-9
6. ஆபிரகாம் மகனைப் பலிபீடத்தின் மேல் செலுத்தின போது கிரியைகளினால் நீதிமானாக்கப்பட்டான் – யாக் 2:17, 20-23
7. விசுவாசத்தினால் ஆபிரகாம் தன் மகனை பலியாக ஒப்புக் கொடுக்கச் சொன்னபோது ஒப்புக் கொடுத்தான் – எபி 11:17-19
8. தேவன் அனுப்பப் போகிற நகரத்துக்கு விசுவாசத்தோடு காத்திருந்தான் – எபி 11:10
9. விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை தூரத்திலே கண்டு நம்பி அணைத்துக் கொண்டான் – எபி 11:13-15
10. விசுவாசத்தோடே 175 வயதில் மரித்தான் – ஆதி 25:7