1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7
2. லோத் ஆபிரகாமை விட்டு பிரிந்த போது கர்த்தர் அவன் கண்களை ஏறெடுத்து எல்லா திசையையும் பார்க்கச் சொல்லி “நீ பார்க்கிற பூமி முழுவதையும் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்றார்.” – ஆதி 13:14, 15
3. ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்த போது “உனக்கு இந்த தேசத்தை சுதந்தரமாக கொடுக்க உன்னை அழைத்தேன்.” என்றார் – ஆதி 15 :6, 7
4. கர்த்தர் உடன்படிக்கை பண்ணிய போது எகிப்தின் நதி துவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டும் உள்ள தேசத்தை உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்களித்தார் – ஆதி 15:18-21