Menu Close

அப்சலோமுக்கும், கிறிஸ்துவுக்குமுள்ள வேற்றுமைகள்

1. அப்சலோம் தாவீதின் குமாரன் மட்டுமே. இயேசுகிறிஸ்துவோ நித்திய ராஜாவாகவும், தேவகுமாரனாகவும் இருக்கிறார் – எபி 7:2, வெளி 19:16
2. இயேசு தந்தைக்கு சமாதானம் வழங்குபவராக இருந்தார் – மத் 3:17, 17:5 மேலும் மனிதருக்கும், தேவனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தினார் – ஏசா 53:5, கொலோ 1:20 அப்சலோமோ தந்தையின் மனம் நோகும்படி செய்தார் – 2சாமு 13:30 – 39, 15:4, 16:22, 18:1 – 17
3. அப்சலோம் தன் அழகிய சரீரத்தால் மக்களைக் கவர்ந்து தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டத் துடித்தான். பின்பு தன் அழகிய தலைமுடியினாலேயே தொங்கினான்- 2சாமு 15:2, 18:9 இயேசு பிதாவின் சித்தத்தைச் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்து பாவிகளுக்காக அந்த கேட்டையடைந்தார் – எபி 10:7, 9 யோவா 18:11, ஏசா 53:2 – 4
4. அப்சலோம் தன் தீமையின் வழியில் பச்சைமரத்தில் தொங்கினான். 2 சாமு 18:9 இயேசுவோ பிதாவின் திட்டத்தின்படி கோரசிலுவையில் பாவிகளுக்காக மரித்தார் – லூக் 23:46
5. அப்சலோம் குழியில் அப்படியே மடிந்தான் – 2சாமு 18:17 இயேசு தேவ திட்டப்படி தம்முடைய ஆவியை பிதாவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு பலியானார் – யோவா 10:17, 18 லூக் 23:46
6. நம்பிக்கையிழப்பில் வாழ்ந்து மடிந்தான். அவனுக்கு குமாரர்களும் இல்லை 2சாமு 18:18 கிறிஸ்து நமக்காக சிலுவையை சகித்தார். அவரை நாம் நித்தியம், நித்தியமாகப் போற்றுவோம் – ஏசா 53:12, 2:10, 12:2

Related Posts