ஆதியாகமம் பதினெட்டாம் அதிகாரத்தில் ஆபிரகாம் தேவனோடு தொடர்பு கொண்டதைக் காண்கிறோம். கர்த்தர் ஆபிரகாமை உச்சிப்பொழுதில் அவனது கூடாரத்தில் சந்தித்தார். அப்பொழுது கர்த்தர் தூதனுடைய சாயலில் மற்றும் இரு தூதர்களுடனிருந்தார். ஆபிரகாம் அவர்களுக்கு உணவு தயாரித்துப் பரிமாறினான். அவர்கள் உணவருந்தினார்கள். ஆபிரகாம் ஆண்டவரோடு நீண்டதொரு உரையாடல் நிகழ்த்தினான். தேவன் ஆபிரகாமுக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக வாக்களித்தார் – ஆதி 18:10 பின் சோதோம், கொமாரா மக்களின் பாவம் கொடியதாய் இருந்ததின் நிமித்தம் அந்த மக்களை அழிக்கும் திட்டத்தை ஆபிரகாமிடம் கூறினார். பத்து நீதிமான்களுக்காகிலும் தேவன் அவ்விரு நகரங்களையும் அழிவினின்று காக்கும்படி ஆபிரகாம் வேண்டினான். தேவனும் அதற்கு இசைந்தார் – ஆதி 18:20 – 33.