Menu Close

குஷ்டரோகியைத் தொட்டு குணமாக்கினார்

மத்தேயு 8 : 1, 2, 3 “ இயேசு மலையிலிருந்து இறங்கின போது, திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். குஷ்டரோகி ஒருவன் வந்து இயேசுவைப் பணிந்து: ஆண்டவரே உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். “

இயேசு மலைப்பிரசங்கம் செய்து விட்டு மலையிலிருந்து இறங்கிய போது திரளான ஜனங்கள் இயேசுவுக்குப் பின் சென்றனர். அப்பொழுது குஷ்டரோக வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவன் இயேசுவைப் பற்றி அறிந்திருந்ததால் இயேசுவைப் பார்த்து ஆண்டவரே என்று அழைத்து “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்”. என்று கூறுகிறான். ஆண்டவருடைய சித்தம் என்னவென்றால் 

1 தெசலோனிக்கேயர் 4 : 3 ல் “நீங்கள் பரிசுத்தமாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” என்றும் 

5 : 18 ல் “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் ……செய்வதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” 

என்றும் பார்க்கிறோம். குஷ்டரோக வியாதி மிகவும் கொடிய வியாதி. மற்றவர் களுக்குத் தொற்றக்கூடியது. எனவேதான் லேவியராகமம் 13 : 45, 46 ல் குஷ்டரோ கியை யாரும் தொடக்கூடாது என்றும், தொட்டு விட்டால் அவன் ஏழு நாட்கள் தீட்டுப்பட்டிருப்பான் என்றும், தீட்டுப்பட்டவன் தேவாலயத்துக்குள் வரமுடியா தென்றும் கூறப்பட்டிருக்கிறது. 

குஷ்டரோகி என்ன பண்ண வேண்டுமென்றால் தன் தலையை மூடாதவனாய் அவனுடைய தாடியை மூடிக்கொண்டு தீட்டு தீட்டு என்று சத்தமிட வேண்டும். அப்போது குஷ்டரோகி வருகிறான் என்று மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள். இவனுடைய பெயரை ஆலயத்தின் பதிவேட்டிலிருந்து கிறுக்கிப் போடுவார்கள் அவனைப் பாளையத்திற்கு வெளியே தனியே இருக்கச் செய்வார்கள் என்று பழையஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். குஷ்டரோகியை அவனுடைய மனைவி பிள்ளைகள் கூடத் தொட மாட்டார்கள் ஆனால் இயேசு அந்த மனிதனைத் தன்னுடைய பரிசுத்தமான கரங்களால் தொட்டு “எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு” என்றார் குஷ்டரோகியைத் தொட்டால் தீட்டுப்படுமே, தொற்றுமே என்றெல்லாம் இயேசு எண்ணவில்லை. அவனைப் பார்த்து மனதுருகி, அன்புடன் தனது கரத்தை நீட்டி அவனைத் தொட்டு நொடிப்பொழுதில் சுகம் கொடுத்தார். அவன் இயேசுவின் சித்தத்தை சந்தேகப்பட்டான். இயேசு வுக்குத் தன்னைக் குணமாக்க விருப்பமுண்டா என்று சந்தேகப்பட்டான். இன்றும் அநேகர் அதேபோல் தான் சந்தேகப்படுகின்றனர். ஆனால் இயேசு தன்னுடைய வல்லமையுள்ள கரத்தினால் தொட்டவுடன் குஷ்டரோகம் நீங்கி சுத்தமானான். இயேசு இதில் பழையஏற்பாட்டுப் போதனையை மாற்றினார். 

2 கொரிந்தியர் 5 : 21 ல் நமக்காகப் பாவமறியாத அவர் பாவமானார் என்றிருப்பதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் கைகளிலிருந்த வல்லமையானது குஷ்டரோக வியாதியை மாற்றக்கூடியதாக இருந்தது. அந்த வல்லமையினால் குஷ்டரோகக் கிருமிகளை அழித்து, பரிபூரண சுகம் கிடைக்கச் செய்தார். அவனு டைய வியாதி நீங்கியதால் அவன் தன் குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டான். தேவனுடைய குடும்பத்திலும் இணைக்கப்பட்டான். தேவாலயத்தின் பதிவேட்டில் நீக்கப்பட்ட அவனுடைய பெயர் சேர்க்கப்பட்டது. நமக்கும் இயேசு கைகளை வைத்து ஜெபிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். நம் மீது அபிஷேகம் நிறைவாக இருக்குமென்றால், நம்மிலிருக்கிற வல்லமை அவர்களை மேற்கொள் ளுமே தவிர அவர்களுக்குள்ளிருக்கிற எந்த வல்லமையும் நம்மைத் தொட முடியாது. ஆனால் தகுதியில்லாதவர்களாக இருந்தால் அவர்களின் மேலிருக்கிற தீய வல்லமை நம்மேல் வருவதற்கு வாய்ப்பு உண்டு. 

ஆகவே மற்றவர்கள் மேல் கைகளை வைப்பதற்கு எச்சரிக்கையாயிருங்கள். இன்றைக்கும் கர்த்தர் நம்மைத் தொட்டு அற்புதம் செய்ய விரும்புகிறார். இயேசு வின் தொடுதல் ஊமையைப் பேச வைக்கிறது. செவிடர்களைக் கேட்க வைக்கி றது. மரித்தோரை உயிரோடு எழுப்புகிறது. நடக்க முடியாதவர்களை நடக்க வைக் கி றது. குஷ்டரோகிகளைக் குணமாக்குகிறது. பிசாசுகளை ஓட ஓட விரட்டுகிறது. அதேபோல் கிறிஸ்துவின் தொடுதல் நம்முடைய வாழ்க்கையை மாற்றி விடும். இன்றைக்கும் இயேசு அவருடைய கரத்தை நம்முடைய கரத்தோடு இணைத்து ஜனங்களைத் தொட விரும்புகிறார். வேதத்தில் மோசேயின் சகோதரி தற்காலி கமாக குஷ்டரோகியாக இருந்து சுகம் பெற்றதையும், நாகமோன் என்ற சீரிய ராஜாவின் படைத்தலைவன் எலிசா தீர்க்கதரிசியின் சொல்படி செயல்பட்டு குஷ்டரோகம் நீங்கியதையும், பழையஏற்பாட்டில் பார்க்கிறோம். நம்முடைய எல்லா நோய்களும் சாபங்களும் இயேசுவின் தொடுதலால் நீங்கும். நாமும் இயேசுவிடம் நம்மைத் தொட்டு ஆசியளிக்க வேண்டுவோம். ஆமென்.

Related Posts