இயேசுவின் பிறப்பு அதிசயமானது:
ஒரு கன்னியின் வயிற்றில் குழந்தை உருவாகும் என்பது அதிசயம். இந்த அதிசய குமாரனாய் இயேசு அவதரித்தார்.
இயேசுவின் வாழ்க்கை அதிசயமானது:
பிலாத்து “இவரிடம் ஒரு குற்றத்தையும் காணேன்” என்றார். இப்படி ஒரு குற்றம் கூட செய்யாத வாழ்க்கை என்பது மிகவும் அதிசயம்.
இயேசுவின் போதனை அதிசயமானது:
இயேசுவின் போதனையைக் கேட்டவர்கள் “இதுவரை மனுஷன் பேசியிராதவைகளை இவர் பேசக் கேட்கிறோமே” என்று கூறினர். இவருடைய போதனைகள் அதிசயிக்கக் கூடியனவாக இருந்தது.
இயேசுவின் அன்பு அதிசயமானது:
பாவிகளிடமும், எதிரிகளிடமும், சத்ருக்களிடமும் தன்னை சிலுவையிலறைந்தவர்களிடமும் கூட அன்பு காட்டினார். இது யாராலும் காட்டமுடியாத அதிசயமான அன்பு.
இயேசுவின் மரணம் அதிசயமானது:
நாம் மரிக்க வேண்டியதற்குப் பதில், நமக்காக அவர் மரித்து நித்திய ராஜ்யத்திற்கு நம்மை தகுதியாக்கியிருக்கிறார்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் அதிசயமானது:
இயேசு மரணத்தை ஜெயித்து கல்லறையிலிருந்து வெளியே வந்து உயிரோடிருப்பதாகக் காட்டினார். இது மிகமிக அதிசயம்.