உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து குமாரனாக இருந்தவர் (ஏசாயா 44 : 6, யோவான் 17 : 24). சிருஷ்டிப்பின் தொடர்பிலும் அவர் குமாரனென அழைக்கப்பட்டுள்ளார் (எபிரேயர் 1 : 2).
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர் (கலாத்தியர் 4 : 4). தன்னுடைய குமாரனை பிதா மனுஷசாயலாக அனுப்பினார் (ரோமர் 8 : 3, ஏசாயா 9 :6, யோவான் 3 :16).
அவரது தேவத்தன்மையையும் மனிதத்தன்மையையும் பிரித்துக் காணமுடியாது. செயல்பாட்டு நிலைகளில் பிதாவாகிய தேவனுக்குக் குமாரன் கீழ்ப்படிந்திருந்தாலும், இருவரும் சமமானவர்களே.
பிதா, குமாரன், பரிசுத்தஆவி, என்ற வரிசை ஒழுங்குடன் வருகிறது. இந்த வரிசையின் முதன்மைத்துவம் ஒருபோதும் ஏற்றத்தாழ்வை காட்டுவதில்லை.
இந்த நிலையில் தான், பிதா தம்மை விட பெரியவர் என்று கிறிஸ்து கூறினார் (யோவான் 14 : 28).
உயிர்ப்பிலும் இயேசு குமாரன் எனப்படுகிறார் (எபிரேயர் 1 : 5, கொலோசெயர் 1 :18).
அவர் தேவனின் ஒரே பேறானவர் (யோவான் 1 :14, 3 : 16).