லூக்கா 1 : 42 எலிசபெத் உரத்த சத்தமாய்: ஸ்தீரிகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.”
தேவதூதன் மரியாளிடம் அவளுடைய கர்ப்பத்தில் இயேசுவானவர் பிறக்கப் போகிறார் என்ற செய்தியை கூறின பின், உன்னுடைய இனத்தாளான எலிசபெத்தும் முதிர் வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாள், இது அவளுக்கு ஆறாவது மாதம் என்றான். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று கூறினான். எனவே மரியாள் எழுந்து சகரியா, எலிசபெத்தின் வீட்டுக்குச் சென்று,. எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத் மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபோது, அவள் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. உடனே பரிசுத்த ஆவியினால் எலிசபெத்து நிரப்பப்பட்டாள். ஆவியில் நிரம்பி அவள் கூறிய வார்த்தை ஸ்திரீகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், உன்னுடைய கர்ப்பத்தில் இருக்கிற குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் கூறினாள்.