ரெவிதீமில் மோசே, யோசுவாவை அமலேக்கியரோடு யுத்தம் பண்ண அனுப்பினான். மோசே ஆரோனுடனும், ஊர் என்பவனுடனும் மலையுச்சிக்குச் சென்றான். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழ விடுகையில், அமலேக்கியர் மேற்கொண்டனர். மோசேயின் கைகள் அசந்து போகையில் ஆரோனும், ஊர் என்பவனும் அவன் கைகளைத் தாங்கினார்கள். அமலேக்கியர் முறியடிக்கப்பட்டனர். அங்கு மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டான் – யாத் 17 : 8-16