Menu Close

91ம் சங்கீதத்தில் நாம் பெறுபவை

1. உன்னதமானவரின் மறைவில் நாம் இருக்கும் போது உலகம், மாம்சம், பிசாசு, சாத்தான், சத்ரு, தீங்கு எதுவும் நம்மை அணுக முடியாது – சங் 91:1
2. கர்த்தருடைய அடைக்கலத்தைத் தாண்டி யாரும் நமக்குத் தீங்கு விளைவிக்க முடியாது. கர்த்தரை நாம் நம்பியிருக்கிறபடியால் அவர் நம்மை இரத்தக் கோட்டைக்குள்ளே மறைத்து சாத்தானின் கோட்டையைத் தகர்த்தெறிவார் -. சங் 91:2
3. சத்துருக்கள் நமக்கு விரோதமாக கண்ணிகள், மந்திரங்கள் வைத்தாலும், அது நம்மை அணுகாமலும், கொள்ளைநோய் நம்மை நெருங்காமலும் காப்பார் – சங் 91:3
4. கோழி தம் சிறகுகளால் தம் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல ஆவியானவர் தமது சிறகுகளால் நம்மை மூடும் போது நமக்கு பாதுகாப்பும், அடைக்கலமும் கிடைக்கும். சத்தியமான வசனம் நமக்குக் கேடகமாயிருந்து நம்மைக் காக்கும் – சங் 91:4
5. இரவில் வரும் கள்ளர்கள், விஷஜந்துக்கள் பகலில் பறக்கும் செய்வினை அம்புகள், இருளில் நடமாடும் கொள்ளைநோய்கள் அனைத்திலிருந்தும் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாத்ததுபோல நம்மையும் பாதுகாப்பார் – சங் 91:5, 6
6. நாம் உன்னதமான கர்த்தரைத் தாபரமாகக் கொண்டதல் ஆயிரம், பதினாயிரம் சத்துருக்கள் வந்தாலும், வாதைகள் வந்தாலும், பொல்லாப்பு வந்தாலும் அவைகள் நம் கூடாரத்தை அணுகாமல் காப்பார். துன்மார்க்கனுக்கு வரும் பலனை நம் கண்களில் காணச் செய்வார் – சங் 91:7 – 10
7. உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையையும், நன்மையையும் குறித்து கவனமாக உற்றுப் பார்க்கும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுகிறார். நம்முடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு நம்மைத் தூக்கி எடுத்து, சிங்கத்தின் மேலும், விரியன்பாம்பின் மேலும் நடக்கும் சக்தியையும், பாலசிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடும் சக்தியையும் தேவன் நமக்கு அளிப்பார் – சங் 91:11 – 13
8. கர்த்தரிடத்தில் வாஞ்சையாயிருக்கிறவர்களை, அவருடைய நாமத்தை அறிந்திருக்கிறவர்களை கர்த்தர் எல்லா பாடுகளிலுமிருந்தும் விடுவித்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். ஆபத்தான நேரத்தில் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, நம்மை ஆபத்திலிருந்து தப்புவித்து இரட்சிப்பார். – சங் 91:14 – 16

Related Posts