1. கர்த்தர் நம்மை மேய்க்க அனுமதிக்கும் பொழுது, நம் வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் கர்த்தர் அருளும் நன்மையினால் தாழ்ச்சியடையாமல் காக்கப்படுவோம்.
2. நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய வார்த்தையின்படி வாழ உற்சாகத்தையும், இளைப்பாறுதலையும் அளிக்கிறார். தம்முடைய பரிசுத்த ஆவியானவர் அமர்ந்த தண்ணீர்களண்டையில் நம்மைக் கொண்டுபோய் விடுகிறார்.
3. நாம் அதைரியமடையும்போது நல்ல மேய்ப்பனானவர் தம்முடைய வல்லமையினாலும், கிருபையினாலும் ஆத்துமாவில் புத்துணர்ச்சி கொடுத்து தேவனுடைய ஆவியினால் தெரிந்தெடுக்கப்பட்ட தேவனுடைய பரிசுத்த வழியில் நடத்துகிறார்.
4. ஆபத்தான கஷ்டமான மரணத்தின் நேரங்களில் கூட தேவன் நம்மோடிருப்பதாலும், அவருடைய பாதுகாப்பு நம்மை சூழ்வதாலும் நாம் பயப்படமாட்டோம்.
5. பொல்லாத சேனைகளினாலும், சாத்தானாலும் நமக்குப் போராட்டங்கள் வந்தாலும் இயேசுவின் இரத்தத்தாலும், பிட்கப்பட்ட சரீரத்தினாலும் நாம் காக்கப்படுவோம். நம்முடைய சரீரம், மனம், மற்றும் ஆவியில் ஆவியானவரின் அபிஷேகம் நிரம்பி வழியும்.
6. நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் மேய்ப்பர் நம்மோடு தொடர்ந்து வருகிறபடியால், மாறாத உதவி, அன்பு, ஆதரவு அனைத்தையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுவோம். மேய்ப்பர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றுவார். மேய்ப்பரின் வீட்டில் நாம் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம்.