1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை வெகுமதியாய்ப் பெற்றனர் – எண் 14:30, 32:11
2. கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப்பிடித்து ஒத்னியேல் காலேபின் குமாரத்தியான அக்சாளை வெகுமதியாய்ப் பெற்றான் – நியா 1:12, 13
3. தாவீது கோலியாத்தை வென்று சவுலின் குமாரத்தியாகிய மீகாளையும், ஆயிரம் பேருக்கு அதிபதி என்ற பட்டத்தையும் பெற்றான் – 1சாமு 17:49, 18:13, 27
4. எபூசியரை முறியடித்து துரத்திய மோவாப் தாவீதின் சேனாதிபதி என்ற பதவியை வெகுமதியாய்ப் பெற்றான் – 1நாளா 11:6
5. நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் அர்த்தத்தைச் சொன்ன தானியேலுக்கு ராஜா வெகுமதிகளைக் கொடுத்தான் – தானி 2:48