1. பார்வோன்: “கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கிறதற்கு அவர் யார்?” என்று மனமேட்டிமையால் கூறினான் – யாத் 5:2
2. நாகமோன்: நாகமோனிடம் குஷ்டம் நீங்க எலிசா ஏழு தரம் யோர்தான் நதியில் ஸ்நானம் பண்ணச் சொன்னார். ஆனால் நாகமோன் மனமேட்டிமையால் “நான் சுத்தமாவதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவோ” என்றான் – 2இரா 5:12
3. உசியா: உசியா மனமேட்டிமையால் தூபங்காட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தான் – 2 நாளா 26:16
4. எசேக்கியேல்: சனகெரிப் விஷயத்திலும், அவருடைய ஆயுசு நாட்களின் விஷயத்திலும் தேவன் அவனுக்கு அற்புதம் செய்தார். ஆனால் அவன் நன்றி மறந்து மனமேட்டிமையானான் – 2நாளா 32:25
5. ஆமான்: ஆமான் மொர்தகாய் தன்னை வணங்காததால் மூர்க்கம் நிறைந்தவனானான் – எஸ்தர் 3:5
6. தீருவின் அதிபதி: தீருவின் அதிபதி மனமேட்டிமையால் “தான் தேவன்” என்றான் – எசே 28:2
7. நேபுகாத்நேச்சார்: நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் “என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமை பிரதாபத்துக்கென்று, ராஜ்ஜியத்துக்கு அரமனையாக நான் கட்டிய மகா பாபிலோன் அல்லவா” என்றான் – தானி 4: 30
8. பெல்ஷாத்சார்: பெல்ஷாத்சார் மனமேட்டிமையால் தேவாலயத்தின் பாத்திரங்களில் திராட்சரசத்தை ஊற்றி தானும், தன்னுடைய மனைவியையும், வைப்பாட்டிகளையையும், பிரபுக்களையையும் அதில் குடிக்கச் செய்தான் – தானி 5:23