Menu Close

வேதத்தில் முகம் வேறுபட்டவர்கள்

1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5
2. லாபானுடைய பிள்ளைகள் எங்கள் தகப்பனுடைய செல்வத்தையெல்லாம் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்று கூறிய போது லாபானின் முகம் வேறுபட்டது – ஆதி 31:2
3. எருசலேம் நகரம் பாழாய்க் கிடக்கிறதையும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதையும் பார்த்து நெகேமியாவின் முகம் வேறுபட்டது – நெகே 2:3
4. மனுஷகைவிரல்கள் சுவரில் எழுதியதைப் பார்த்த பெல்ஷாத்சார் ராஜாவின் முகம் வேறுபட்டது – தானி 5:5, 6
5. தானியேல் தான் சொப்பனத்திலும், தரிசனத்திலும் பார்த்த நான்கு மிருகங்களைப் பற்றிய விளக்கத்தை ஒருவனிடத்தில் கேட்டான். அவன் அதன் விளக்கத்தைக் கூறியபோது தானியேல் மிகவும் கலங்கினான். அவனுடைய முகம் வேறுபட்டது – தானி 7:2-28
6. இயேசு ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று – லூக் 9:29
7. மோசே சாட்சி பலகைகளுடன் சீனாய் மலையிலிருந்து இறங்கும் போது அவருடைய முகம் பிரகாசித்தது – யாத் 34:29

Related Posts