1. தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுமென நம்பப்பட்டு வந்ததால் ராகேல், லேயாளிடம் அதைக் கேட்டாள் – ஆதி 30:14
2. எசேக்கியேல் ராஜாவின் வாழ்நாளைக் கூட்டுவதற்காக அத்திப்பழத்தின் அடையைக் கொண்டு வந்து பிளவையில் பற்றுப்போட ஏசாயா தீர்க்கதரிசி கூறினார் – ஏசா 38:21
3. நோயுற்றவர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப்பணியை இயேசு ஆதரித்தார் – மத் 9:12
4. குற்றுயிராய்க் கிடந்தவனின் காயங்களில் நல்ல சமாரியன் எண்ணையும் திராட்சரசமும் ஊற்றி கட்டுப்போட்டான் – லூக் 10:34