Menu Close

வேதத்தில் பொறுமையில்லாமல் தவறு செய்தவர்கள்

1. மோசே ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்ததால் கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில் பொறுமையிழந்து அடித்து விட்டான் – எண் 20:10, 11
2. எலிசா நாகமோனின் குஷ்டத்தை நீக்க யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணச் சொன்னார். ஆனால் நாகமோன் பொறுமையின்மையால் கடுங்கோபங் கொண்டார் – 2இரா 5.
3. யோனா நினிவேயினிமித்தம் கடுங்கோபங் கொண்டு குடிசையிலிருந்தான். அப்பொழுது கர்த்தர் கட்டளையிட்ட ஆமணக்குச் செடியைப் பார்த்து சந்தோஷப் பட்டான். ஆனால் தேவன் அந்த செடியை ஒரு பூச்சியின் மூலம் காய்ந்து போகச் செய்தார். அதனால் யோனா கோபத்தில் பொறுமையில்லாமல் “உயிரோடிருப்பதைக் காட்டிலும் சாவதே நலம்” என்றான். – யோனா 4:6 –11
4. இயேசுவிடம் தன்னுடைய பிசாசின் பிடியிலிருக்கும் பெண்ணிற்காக வந்த கானானியப் பெண்ணை பொறுமையிழந்து அனுப்பிவிட சீஷர்கள் கூறினார் – மத் 15 :21 – 23
5. சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் யாக்கோபும், யோவானும் பொறுமையிழந்து அவர்களை அழிக்க இயேசுவிடம் கேட்டனர் – லூக் 9:52 – 54
6. லாசரு இறந்ததைக் கேட்டு அங்கு வந்த இயேசுவிடம் மரியாள் பொறுமையிழந்து “நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்துப் போயிருக்க மாட்டான்” என்றாள் – யோ 11:32

Related Posts