• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப் போடு” என்றான். ஏசாவோ அதை ஏற்று சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப் போட்டான் – ஆதி 25:29-34
• ரூபன்: ரூபன் பெண்ணாசையால் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு சயனித்ததால் கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அந்த சுதந்தரம் யோசேப்புக்குக் கொடுக்கப்பட்டது. 1நாளா 5:1 ஆதி 35:22, 49:3,4