Menu Close

வேதத்தில் பண்ணிய பொருத்தனைகளில் சில சான்றுகள்

1. யாக்கோபு பண்ணிய பொருத்தனை: ஆதி 28:20 – 22 “யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,”
“என்னை தன் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பி வரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;”
“நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லி பொருத்தனை பண்ணிக்கொண்டான்.”
2. இஸ்ரவேலர் பண்ணிய பொருத்தனை: எண் 21:2 “இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.”
3. யெப்தா பண்ணிய பொருத்தனை: நியா 11:30, 31 “யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,”
“நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர் கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதை சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன்.”
4. அன்னாள் பண்ணிய பொருத்தனை: 1சாமு 1: 11 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள்.”
5. தர்ஷீசுக்கு போகும் கப்பலிலிருந்தவர்கள் பண்ணிய பொருத்தனை:
யோனா 1: 16 “அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.”
6. பவுல் பண்ணிய பொருத்தனை: பவுல் பொருத்தனை பண்ணி நிறைவேற்றிய பின் சீரியா தேசத்துக்குப் போனான் – அப் 18:18
7. நாலுபேர் பண்ணிய பொருத்தனை: பவுல் பொருத்தனை பண்ணிய நாலுபேர் எங்களிடத்தில் உண்டு என்று கூறியதைப் பார்க்கிறோம் – அப் 21:23

Related Posts