Menu Close

வேதத்தில் துன்புற்றோரும், துன்புறுத்தியோரும் அதன் நிகழ்வுகளும்

1. யோபு நீதிமானாக வாழ்ந்ததால் சாத்தானின் துயரங்களால் சோதிக்கப்பட்டார் – யோபு 1:8 – 12, 2:3 – 7
2. ஈசாக்கின் தேவ ஆசீர்வாதத்தினால் பெலிஸ்தியர் பொறாமையடைந்து நெருக்கி நஷ்டங்களை ஏற்படுத்தினர் – ஆதி 26:12 – 33
3. இஸ்ரவேலர் தண்ணீர் இல்லை என்று கண்டபோது இலட்சியத்தை மறந்து வசைபாடினர் – யாத் 17:1 – 7
4. தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் அரியணையில் அமராதபடி தடுக்க சாத்தான் செய்த சதிகளுக்கு ஆயுதங்களாக சவுலும், பிறரும் செயல்பட்டனர் – 1சாமு 20 – 27, 31, 59
5. எலியா, ஆகாபும், யேசபேல் செய்கின்ற பாவங்களைச் சுட்டிக்காட்டி கர்த்தரின் தீர்க்கதரிசியாக விளங்கியதால் கொலை செய்யப்பட தேடப்பட்டார் – 1இரா 18:10 – 19:2
6. மிகாயா ஆகாப் ராஜாவிடம் சரியான தீர்க்கதரிசனத்தைக் கூறி அழிவிலிருந்து மனந்திரும்ப எச்சரிப்புக் கொடுத்ததால் சிறையிடப்பட்டார் – 2நாளா 18:12 – 26
7. யோராம் ராஜாவின் பாவத்தால் பஞ்சம் ஏற்பட்டபோது கர்த்தரின் தீர்க்கதரிசியான எலிசா கொல்லத் தேடப்பட்டார் – 2இரா 6:31
8. அன்னிய அரசரின் பலத்தைச் சார்ந்து கொண்ட ஆசா ராஜாவைக் கடிந்து கொண்டதற்காக அனானி தேசத்துரோகக் குற்றவாளியாக சிறையிடப்பட்டார் – 2நாளா 16:7 – 10
9. யோவாஸ் தேவகட்டளையை மீறி நடந்ததால் சித்திபெற மாட்டாய் என சகரியா தீர்க்கதரிசி எச்சரித்ததால் கல்லெறிந்து கொல்லப்பட்டார் – 2நாளா 24:20 – 22
10. உரியா தீர்க்கதரிசி யோயாக்கீம் ராஜாவின் தவறான வழிகளை கூறி திருந்த அழைத்ததால் கொல்லப்பட்டார் – எரே 26:20 – 23
11. எரேமியா தீர்க்கதரிசி பாவத்தால் அழியவிருந்த தேசத்தைப் பற்றி சிதேக்கியா ராஜாவிடம் முன்னுரைத்ததற்காக தேசத்துரோகியாக துன்புறுத்தப்பட்டார் – எரே 37:1 – 38: 13
12. நேபுகாத்நேச்சாரின் விக்கிரகத்தின் முன் பணியாததற்காக சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை தீச்சூளையில் போட்டனர் – தானி 3ம்அதி
13. தேவனைத் தொழுது வந்ததற்காக தானியேலை நேபுகாத்நேச்சாரின் அதிகாரிகள் சிங்கக் குகையில் போட்டனர் – தானி 6 .
14. யோவான்ஸ்நானகன் ஏரோது, ஏரோதியாளின் விபச்சாரப் போக்கைச் சுட்டிக் காட்டியதால் தலை வெட்டப்பட்டார் – மத் 14:3 – 13
15. இயசு தேவகுமாரனாக வாழ்ந்து காட்டியதற்காக தேவதூஷணம் உரைத்தனர் என்று மதத் தலைவர்கள் குற்றம் சாட்டினர் – சுவிசேஷ நூற்கள்
16. பேதுருவும், யோவானும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததால் மதத் தலைவர்கள் அவர்களை சிறையிலடைத்தனர் – அப் 4:1-31, 12:1 – 5
17. ஸ்தேவானும், யாக்கோபும் சுவிஷேசம் உரைத்ததற்காக கொலை செய்யப்பட்டனர் – அப் 6 –7அதி, 12:1,2
18. பவுல் சுவிஷேசம் கூறியதற்காக எதிரிகள் கல்லெறிந்தனர், சிறையிலடைத்தனர், பின்பு கொல்லப்பட்டார் – அப் 14:19, 16:16 – 24
19. தீமோத்தேயு சுவிசேஷம் கூறியதற்காக சிறையிடப்பட்டார் – எபி 13:23
20. யோவான் சுவிசேஷம் கூறியதற்காக நாடு கடத்தப்பட்டார் – வெளி 1:9

Related Posts