• சங் 119:97 – 104 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”
• “நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.”
• “உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால் போதித்தவர்களெல்லோரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.”
• “உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால் முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.”
• “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.”
• “நீர் எனக்குப் போதித்ருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.”
• “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.”
• “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.”