Menu Close

வேதத்தில் கூறும் கசப்புகளின் விளக்கம்

1. பின்மாற்றத்தினால் வரும் கசப்பு: நகோமி பெத்தலேகேமான தேவனுடைய வீட்டை விட்டு புறஜாதியாரின் பட்டணத்திற்குச் சென்றாள். தன் பிள்ளைகளுக்கு மோவாபியப் பெண்களையே மனைவியாக்கினாள். பின்மாற்றத்தினால் தன் கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து சந்ததியற்றுப் போனாள். மனந்திரும்பி எருசலேமுக்கு வந்தபோது தேவன் மறுபடியும் அந்த குடும்பத்தைக் கட்டி எழுப்பினார் – ரூத் 1:5, 4 :13
2. பிசாசினால் வரும் கசப்பு: கூனி ஒருத்தி பிசாசின் கட்டினால் நிமிரமுடியாமல் கசப்புடன் வாழ்ந்தாள். இயேசுவோ அவளை அழைத்து கூனை நிமிர்த்தி கசப்பை மாற்றினார் – லூக் 13:11, 12
3. வியாதியினால் வரும் கசப்பு: எசேக்கியா ராஜா வியாதியில் இறந்து போகும் தருவாயில் இருந்த போது மனங்கசந்து தேவனை நோக்கிக் கதறினார். தேவன் அவனுடைய கசப்பை மாற்றி ஆயுசுநாட்களைக் கூட்டிக் கொடுத்தார் – ஏசா 38:5
4. வார்த்தைகளினால் கசப்பு: தாவீது ராஜாவுக்கு எதிராக சீமேயி தூஷண வார்த்தைகளைப் பேசினான். அபிசாய் அவனைக் கொலை செய்யத் தாவீதிடம் கேட்டபோது “கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். கர்த்தர் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக நன்மையைச் சரிக்கட்டுவார்” என்றான் – 2சாமு 16:11, 12 அதைக் கர்த்தர் கனப்படுத்தி சீமேயியைத் தாவீதின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செய்தார் – 2சாமு 19:19, 20
5. குடும்பத்தில் கசப்பு: ஆபேலுக்கு மேல் காயீனுக்கு ஏற்பட்ட கசப்பினிமித்தம் அவன் சகோதரனாயிருந்தும் அவனைக் கொலை செய்தான் – ஆதி 4:8
6. மரணத்தினால் வரும் கசப்பு: இயேசு சவுக்கடி பட்டு சிலுவையில் இருக்கும் பொழுது கசப்பான காடியைக் கடற்காளானில் தோய்த்து அவரிடம் நீட்டினார்கள் அவரோ அதைக் குடிக்க மனதில்லாதிருந்தார். மரணம் அவருக்கு ஒரு சிறிய பிரிவு மட்டுமே கிறிஸ்து வரும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்போம் – மத் 27:34

Related Posts