Menu Close

வேதத்தில் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்

1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11
2. ஆபிரகாம் ஆகாருடன் உறவு கொள்ளும்படி தன் சொந்த மனைவி சாராளின் மூலம் கவர்ச்சி வந்தது. அதற்கு ஆபிரகாம் மறுப்புத் தெரிவிக்காமல் அவளோடு சேர்ந்தான் – ஆதி 16:2, 4, 12
3. சிம்சோன் தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டு தன் கண்களை இழந்தான் – நியா 14:3
4. தாவீது பத்சேபாளின் கவர்ச்சியில் விழுந்து தவறு பண்ணியதால் அவன் குடும்பத்தில் எத்தனையோ அங்கத்தினர் மடிந்தனர் – 2சாமு 12:10
5. சாலமோன் பிறமதபெண்கள் பலரை தனது மனைவியாக ஆக்கி கவர்ச்சியால் கட்டுண்டான். அதனால் இஸ்ரவேல் இரண்டாய்ப் பிளந்தது – 1இரா 11:3 – 12

Related Posts